

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. தலைவருமாக இருப்பவர் பி.எஸ்.எடியூரப்பா. இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, சித்தராமையா தான் ஒரு சுத்தமான அரசியல்வாதி என அடிக்கடி பேசி வருகிறார். ஆனால், அவர் செய்துள்ள ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை அளித்து இன்னும் 4 நாளில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், எடியூரப்பாவின் சவாலை ஏற்பதாக முதல் மந்திரி சித்தராமையா இன்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் எடியூரப்பாவின் சவாலை ஏற்கிறேன். ஆனால், அதற்கு முன்னதாக நான் ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை அவர் வெளியிட வேண்டும் என்றார்.