தீபிகாவைத் தொடர்ந்து ஷ்ரத்தா கபூர்... போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம்

போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகை ஷ்ரத்தா கபூர் இன்று மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
விசாரணைக்கு ஆஜராக வந்த ஷ்ரத்தா கபூர்
விசாரணைக்கு ஆஜராக வந்த ஷ்ரத்தா கபூர்
Published on

மும்பை:

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. சுஷாந்த சிங் தற்கொலை வழக்கின் விசாரணை போதைப்பொருள் கோணத்திலும் நடைபெறுகிறது. 

போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

அதன்படி, ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜரான நிலையில், நடிகை ஷ்ரத்தா கபூர் இன்று மதியம் விசாரணைக்கு ஆஜரானார். மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com