ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர்
பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com