நீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

கர்நாடக மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்
Published on

பெங்களூர்:

கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பகப்பா ஹரிஜன். இவர் தனது சகோதரர் சந்தப்பா பகப்பா கொலை வழக்கு சம்பந்தமாக ஆதாரங்கள் வழங்க இன்று விஜயபுரா நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஹரிஜனை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஹரிஜன் உடலில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் குண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ஜலங்கரா பகுதி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸ் உயர் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் இருக்கும் நீதிமன்றத்தில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com