சூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு - கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற மாமனார்

சூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்ப்பு வைத்திருந்த கட்டிட தொழிலாளியை மாமனார் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளி அடுத்த தொட்டேஅள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30).

இவர் சப்படி பகுதியில் உள்ள தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் தொட்டே அள்ளி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முரளி (35) என்பவருக்கும், சீனிவாசன் மனைவி லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது முரளியும், லட்சுமியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை நேரில் பார்த்த சீனிவாசன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர் அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தொட்டேஹள்ளி அருகே பலத்த காயங்களுடன் முரளி இறந்து கிடந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முரளியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது முரளியை கட்டையால் அடித்து கொன்றதாக சீனிவாசனின் தந்தை பர்சப்பா போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தனது மருமகள் லட்சுமியுடன் முரளி கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த சீனிவாசன் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாததால், மனமுடைந்த சீனிவாசன் 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது தெரிகிறது.

இதைத்தொடர்ந்து லட்சுமி கொத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையறிந்த முரளி அங்கு சென்றும் லட்சுமியை தொந்தரவு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் முரளி லட்சுமியை பார்ப்பதற்காக கொத்தூருக்கு வந்தார். இதனை அங்கிருந்த சீனிவாசனின் தந்தை பர்சப்பா அவரை கண்டித்தார். அப்போது இருவருக்குமிடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

நேற்று மாலை மீண்டும் லட்சுமியை பார்ப்பதற்காக முரளி கொத்தூருக்கு வந்தார். அப்போது அங்கிருந்த பர்சப்பா, பலமுறை கூறியும் தனது மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பர்சப்பா, அங்கிருந்த கட்டையை எடுத்து அவரை பலமாக அடித்து கொலை செய்தார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

சரண் அடைந்த பர்சப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com