

சோளிங்கர்:
சோளிங்கர் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 52). விவசாயி. முரளிக்கு, அவரது பக்கத்து நிலத்துக்காரரான முனியம்மாளுக்கும் பொது கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் இருக்கிறது.
இந்த நிலையில், நேற்றும் தண்ணீர் பாய்ச்சுவதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முனியம்மாளும், அவருடைய மகன் கோவிந்தராஜூம் சேர்ந்து முரளியை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த முரளி சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, கொண்டப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய்-மகனை கைது செய்தனர்.