சோழிங்கநல்லூர் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற கணவர்

சோழிங்கநல்லூர் அருகே ஜெயலில் இருந்தபோது பார்க்க வராததால் மனைவியை வெட்டி கொல்ல முயன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற கணவர்
Published on

சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சரண்யா.

கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒரு வழக்கில் ராஜேசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை மனைவி சரண்யா ஜெயிலுக்குள் பார்க்க செல்லவில்லை என்று தெரிகிறது. கணவரை ஜாமீனில் வெளியே எடுக்க முயற்சி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ராஜேஷ் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். தன்னை பார்க்க வராததால் மனைவி சரண்யா மீது கோபமும் அவரது நடத்தையில் சந்தேகமும் அடைந்தார்.

இதையடுத்து மனைவி சரண்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நேற்று மாலை பெசன்ட்நகர், சிவசுந்தர அவென்யூ பகுதியில் நடந்து சென்ற சரண்யாவை ராஜேசும், அவரது நண்பர்களும் சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயம் அடைந்த சரண்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கண்ணகிநகரை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ் உள்ளிட்ட அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com