சோழவந்தான் அருகே திருமணமான ஒரு வருடத்தில் தொழிலாளி தற்கொலை

சோழவந்தான் அருகே திருமணமான ஒரு வருடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சோழவந்தான்:

சோழவந்தான் அருகேயுள்ள மேலபச்சேரியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் அசோக் (வயது 27). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அசோக்கின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்த நிலையில் அசோக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அசோக் திடீரென இந்த பரிதாப முடிவை தேடிக் கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அசோக்கின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

அசோக் தற்கொலை குறித்து சோழவந்தான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக் டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com