

மும்பை:
மராட்டிய மாநிலத்தில் மும்பையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஐதராபாத் எம்.பி.யான் அசாதுதீன் ஒவைசி மீது ஷூ வீசிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
மராட்டிய மாநிலம் மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள நாக்பாடாவில் முத்தலாக் தடை ஒழிப்பு மசோதாவுக்கு எதிரான பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி நேற்றிரவு நடைபெற்ற பங்கேற்று பேசினார்.
ஒவைசி பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்து ஆசாமி ஒருவன் தனது ஷூவை கழற்றி அவர் மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஷீ வீசிய ஆசாமியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பாக ஒவைசி கூறுகையில், முத்தலாக் தடை ஒழிப்பு மசோதாவை இஸ்லாமியர்கள் உள்பட பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
முத்தலாக் மசோதா தொடர்பான பேரணியில் கலந்து கொண்ட எம்.பி. அசாதுதீன் ஒவைசி மீது ஆசாமி ஒருவர் ஷூ வீசியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.