

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.
இந்தியா - ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன் இங்கிலாந்து அல்லது இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் பிரபலங்களால் கணிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 2-3 என இழந்ததால் இந்தியாவின் மீதான பார்வை படிப்படியாக மங்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கே வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.