அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ல் இருந்து 62 ஆக உயர்வு - ம.பி. முதல் மந்திரி உத்தரவு

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 62ஆக உயர்த்தப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ல் இருந்து 62 ஆக உயர்வு - ம.பி. முதல் மந்திரி உத்தரவு
Published on

போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் பா.ஜ.க.வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு ஊழியர்கள் சிலர் எந்த பதவி உயர்வும் இன்றி ஓய்வு பெறுவதாக மூத்த ஊழியர்கள் சிலர் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணிபுரிவதுடன், நிச்சயம் அவர்கள் பதவி உயர்வும் அடைய முடியும் என தெரிவித்தார்.

அப்போது, மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுவதை மறுத்த அவர், மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன் என்றார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com