

இந்தியாவைச் சேர்ந்த லூஜ் எனப்படும் பனிச்சறுக்கு வீரரான சிவ கேசவன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் மூன்று முறை ஆசிய கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
வியஸ்மன் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிவா அதில் பெற்ற புள்ளிகள் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். தென்கொரியாவின் பியாசங் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற முதல் இந்தியர் சிவ கேசவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் பேசுகையில், 'ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பையில் இன்னும் 5 தொடர்களில் விளையாட வேண்டும். ஆனால் இனி மிகவும் நிதானமாக விளையாடுவேன். அடுத்து விளையாடும் 4 வாரங்களுக்கும் உங்கள் ஆதரவை எனக்கு தர வேண்டும்' என கூறினார்.