மும்பை தாக்குதல் தீவிரவாதியை தூக்கிலிட எதிர்த்தவர் துணை ஜனாதிபதி வேட்பாளரா? சிவசேனா பாய்ச்சல்
மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் பரிதாபமாக பலியாகினர். இதில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2015-ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று டுவிட்டரில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பதிவிட்டுள்ளார்,
’மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி யாகூப் மேமனுக்கு 2015 ஜூலை 30-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர், கோபால கிருஷ்ண காந்தி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், யாகூப் மேமனுக்கு கருணை அடிப்படையில் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

