அமெரிக்காவில் இந்திய சிறுமி மரணம்: எந்த தொடர்பும் இல்லை என்கிறார் வளர்ப்புத் தாய்

அமெரிக்காவில் இந்திய சிறுமி மரணத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என சிறுமியின் வளர்ப்புத் தாய் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இந்திய சிறுமி மரணம்: எந்த தொடர்பும் இல்லை என்கிறார் வளர்ப்புத் தாய்
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள்,  அனாதை இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ந்து வந்தனர்.  அந்த குழந்தை கடந்த 7-ம் தேதி காணாமல் போனது.

மேத்யூஸ் அளித்த புகாரின் அடிப்டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுமியை போலீசார் தேடினர். பின்னர் மேத்யூசுவின் வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், மேத்யூசை கைது செய்தனர். மேத்யூ கூறிய வாக்குமூலத்தில், 'ஷெரினுக்கு இரவு பால் குடிக்கும் போது திடீரென அடைப்பு ஏற்பட்டது. அதனால் அவள் இறந்து விட்டாள். ஷெரின் உடலை நான் தான் வெளியே கொண்டு சென்று மறைத்து வைத்தேன்' என கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் மரணத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வளர்ப்புத் தாய் சினி மேத்யூஸ் கூறியுள்ளார்.

சினி மேத்யூஸ் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மிசேல் நோல்ட், கிரேக் கிப்ஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சினி மேத்யூஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். பல்வேறு அதிகாரிகள் அவரிடம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். வழக்கறிஞர் யாரும் அப்போது அவருடன் இருக்கவில்லை.

நடந்த சம்பவம்  குறித்து போலீஸ் விசாரணையின்போது மேத்யூஸ் கூறிவிட்டார். எனவே, அவரது மனைவி சினி மேத்யூசிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஷெரின் மரணத்திலோ அல்லது உடலை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தியதிலோ அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் மகளை இழந்த வருத்தத்தில் இருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com