செங்கோட்டை அருகே காவலாளி மர்ம மரணம்

செங்கோட்டை அருகே காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள புளியரையை அடுத்த அங்கன்காலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவர் அப்பகுதியில் உள்ள தோப்பில் காவலளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இவர் தெற்குமேடு கிராமத்தில் உள்ள ஒரு தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்தவர்கள் புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கோபால் உடலை கைப்பற்றி செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கும் என்றும், கோபாலுக்கு ரத்தம் அழுத்த நோய் இருந்து வந்ததாக தெரிய வந்தது. எனவே ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com