டே-நைட் டெஸ்ட்- ரவி சாஸ்திரி யு-டர்ன் அடித்ததால் பிசிசிஐ அதிகாரிகள் அதிர்ச்சி

பகல்-இரவு டெஸ்டில் விளையாட சம்மதம் தெரிவித்த ரவி சாஸ்திரி தற்போது அதில் இருந்து மாறியிருப்பது பிசிசிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BCCI
டே-நைட் டெஸ்ட்- ரவி சாஸ்திரி யு-டர்ன் அடித்ததால் பிசிசிஐ அதிகாரிகள் அதிர்ச்சி
Published on

இந்திய அணி ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு பகல்-இரவு ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. பிசிசிஐ அதிகாரிகள் இதுகுறித்து தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியிடம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ரவி சாஸ்திரி சம்மதம் தெரிவித்தார்.

லோதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ-யில் அமல்படுத்த உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராயின் அனுமதி இல்லாமல் தற்போது பிசிசிஐ-யில் எந்தவொரு செயலும் நடக்காது.

சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் இந்தியா சென்று விளையாடும் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது. அப்போது அடிலெய்டில் நடைபெறும் டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் கிடையாது என அறிவிக்கப்பட்டது..

இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில் ‘‘இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியிடம் பகல்-இரவு டெஸ்ட் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி பிங்க் பால் போட்டிக்கு தயாராக 12 முதல் 18 மாதங்கள் தயாராக வேண்டும்’’ என்றார். இதனால் இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாட மறுப்பு தெரிவித்துவிட்டது என்று விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com