சார்ஜாவில் குடும்பத்தினரை காணச் சென்ற இந்திய தம்பதி கார் விபத்தில் பலி

சார்ஜாவில் குடும்பத்தினரை காணச் சென்ற இந்திய தம்பதியர், கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Indiancoupledead
சார்ஜாவில் குடும்பத்தினரை காணச் சென்ற இந்திய தம்பதி கார் விபத்தில் பலி
Published on

சார்ஜா:

இந்தியாவைச் சேர்ந்த வினோத்பாய் படேல்(47), ரோகிணிபேகன் வினோத்பாய் படேல்(42), சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா,  தீபக் படேல், வைஷாலி ஆகியோர் விடுமுறை நாட்களை கொண்டாட சார்ஜா வந்திருந்தனர். இவர்கள் குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த செவ்வாய்க்கிழமை சார்ஜாவில் அனைவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

ரோகிணியின் மைத்துனர் தீபக் படேல் பாலைவன பகுதியில் காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது, காரின் வேகத்தை தொடர்ந்து அதிகப்படுத்தினார். அப்போது கார் கட்டுப்பாட்டினை இழந்து உருண்டு விழுந்தது.

இதில் ரோகிணிபேகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் வினோத்பாய் படேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தம்பதி  தங்கள் குடும்பத்தினரை காண 12 ஆண்டுகளுக்கு பின்னர்  சவுதிக்கு முதல் முறையாக வந்துள்ளனர். மேலும் காரை ஓட்டிச் சென்ற தீபக் படேல் அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.

இந்நிலையில் படுகாயமடைந்த சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா, வைஷாலி ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேக்னா கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Indiancoupledead

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com