மதுரை பசுமலையில் ஷேர்ஆட்டோ மோதி 1½ மாத குழந்தை பலி

மதுரை பசுமலையில் ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 1½ மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. படுகாயம் அடைந்த கணவன்- மனைவி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

மதுரை:

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பர்மா காலனியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ். இவருக்கு 1½ மாத கவிஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.

சம்பவத்தன்று ஞானபிரகாஷ் தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். பசுமலை சர்ச் அருகே வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஷேர்ஆட்டோ கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஞானபிரகாஷ், அவரது மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த கவிஸ்வரனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி கவிஸ்வரன் பரிதாபமாக இறந்தான். ஞானபிரகாஷ், அவரது மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஷேர்ஆட்டோ விபத்தில் தம்பதி, குழந்தையை இழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com