சாணார்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

சாணார்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாணார்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி யூனியனுக்குட்பட்ட பல கிராமங்களில் கடந்த பல மாதமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதையடுத்து அப்பகுதி பெண்கள் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அவர்கள் உறுதி மொழி அளித்தனர்.

இதனால் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்காவிட்டால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com