சாணார்பட்டி அருகே வேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பீதி

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சாணார்பட்டி அருகே வேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பீதி
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காய்ச்சல் கண்டவர்கள் கை கால் வீக்கம், மயக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். மருத்துவரிடம் காண்பித்தும் மர்ம காய்ச்சல் குணமாகவில்லை. எனவே இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எப்போது என்ன நடக்குமோ என்று பீதியடைந்துள்ளனர்.

இது குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கூறுகையில், கிராமங்களுக்கு நேரடியாக சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். அதிக காய்ச்சல் உள்ளவர்கள் ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com