சாணார்பட்டி அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

சாணார்பட்டி அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கோபால்பட்டி:

சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் மேட்டுக்கடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சாக்குப்பையுடன் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசார் சந்தேகமடைந்து அவரது சாக்குப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் விசாரணையில் அவர், மேட்டுக்கடையை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com