வெட்கங்கெட்ட கெஜ்ரிவால் தானாக ராஜினாமா செய்ய மாட்டார்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்

லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தானாக ராஜினாமா செய்ய மாட்டார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
வெட்கங்கெட்ட கெஜ்ரிவால் தானாக ராஜினாமா செய்ய மாட்டார்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்
Published on

புதுடெல்லி:

டெல்லி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கபில் மிஷ்ராவை, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி நீக்கம் செய்தார். பல இடங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் நீக்கப்பட்டதாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார். 

ஆனால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்குவதை தான் பார்த்ததாக, ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மந்திரி கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டினார். 

சுகாதாரத் துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடியை கெஜ்ரிவால் பெற்றதாக மிஸ்ரா கூறினார். இதனால் டெல்லி அரசியல் களம் திரும்பவும் சூடுபிடித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள  அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தானாக ராஜினாமா செய்ய மாட்டார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தொடக்கத்தில் இருந்தே அவரை நான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறேன். அவரை திரு.420 என்று அழைத்து வந்தேன். அன்னா ஹசாரை உடன் இருந்தது முதல் கெஜ்ரிவாலை எனக்கு தெரியும். அவர் கம்யூனிசத்தின் ஆதரவாளர் என்பதில் எல்லோரும் எச்சரிக்கையுடன் இருந்தார்கள்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com