

புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில் பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது “துரோகிகளை சுடுங்கள்’’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததையடுத்து அவர் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை வித்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் விதித்த தடை முடிவடைந்ததையடுத்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேர்தல் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் அனுராக் தாக்கூர் பங்கேற்றார்.
அதில் அவர் பேசியபோது, “தேர்தலின் போது புதுடெல்லி மக்கள் தாமரை சின்னத்திற்கு (பாஜக) ஆதரவாக வாக்களித்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 11-ம் தேதி வெளியான உடன் ஷாகீன் பாக் போராட்டக்களம் ஒடுக்கப்படும்’’ என அவர் தெரிவித்தார்.