செய்துங்கநல்லூரில் இளம்பெண் மர்ம மரணம்

செய்துங்கநல்லூரில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்துங்கநல்லூரில் இளம்பெண் மர்ம மரணம்
Published on

செய்துங்கநல்லூர்:

செய்துங்கநல்லூர் அருகே உள்ள சந்தையடியூர் வேலன் காட்டான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது40). டிரைவர். இவரது மனைவி ஆனந்த ஈஸ்வரி (36). இவர் நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு பூஜா (4) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி ஆனந்த ஈஸ்வரியை பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து அவர் கடந்த 6-ந்தேதி வீடு திரும்பினார். கடந்த 7-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தந்தை பெரியசாமி, ஆனந்த ஈஸ்வரியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செய்துங்க நல்லூர் போலீசில் பெரியசாமி புகார் செய்தார். புகாரில் அவர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆனந்த ஈஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் தூத்துக்குடி ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com