அரக்கோணம் அருகே கழிவுநீர் கால்வாயில் பெண் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

அரக்கோணம் அருகே கழிவுநீர் கால்வாயில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அருகே கழிவுநீர் கால்வாயில் பெண் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி இவரது மனைவி அம்சா (எ) வள்ளி (வயது 40). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். ரகுபதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அம்சா எந்தவித ஆதரவுமின்றி அந்த பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் திரு.வி.க.தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அம்சா இன்று காலை இறந்துகிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அரக்கோணம் கிராம நிர்வாகி வேலுவிற்கும் அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அம்சா உடலில் காயங்கள் இருந்தன எனவே அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழந்ததில் ஏற்பட்ட காயங்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com