

செவ்வாப்பேட்டை:
வேப்பம்பட்டு சி.டி.எச். சாலையில் இன்று காலை தாறுமாறாக ஓடிய கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி நின்றது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த திருநின்றவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பால்ஞானசேகரன், மற்றும் காரில் இருந்த தாம்பரத்தை சேர்ந்த டாக்டர் ராஜேந்திரன், அவரது மனைவி இன்மொழி காயம் அடைந்தனர்.
விபத்து ஏற்படுத்திய காரை ஒட்டி கொட்டா மேடை சேர்ந்த கார்த்திக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த 4 பேருக்கும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து ஏற்படுத்திய காரில் மேலும் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் செவ்வாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.