சேவூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

சேவூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேவூர்:

சேவூர் அருகே உள்ள முறியாண்டம்பாளையம் கிராமம் சூரிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் திருமலைசாமி (வயது54). இவருக்கு லட்சுமி என்கிற மனைவியும், 2 மகள், 1 மகனும் உள்ளனர். இவர்கள் கோவை, சரவணம்பட்டியில் வசித்து வருகிறார்கள். கூலித்தொழிலாளியான இவர் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதால் தனது சொந்த ஊரான சேவூர் அருகே சூரிபாளையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். தனது நண்பர்களிடம் அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவதாகவும், இதனால் மன உலைசல் ஏற்படுவதாகவும் கூறியுனார்.

இந்த நிலையில் சேவூர் அருகே மூலக்குரும்பபாளையம் குளத்தில் உள்ள வேப்பமரத்தில் நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பகுதிக்கு சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருமலைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com