ஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினருடனான மோதலில் 34 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Militantskilled
ஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு படையினருடனான மோதலில் 34 பயங்கரவாதிகள் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது.  தீவிரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அச்சா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

இதேபோல், குஷ் டேபா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 7 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 11 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்..

மேலும், இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரும் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Militantskilled

X

Maalai Malar
www.maalaimalar.com