ஜம்மு - காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டு கொலை

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படைவீரர்கள் 7 பேரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. #jammukashmir #paksoldiers
ஜம்மு - காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டு கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். அவர்கள் சிறு பீரங்கிக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய படையினர் பதிலடி தாக்குதல் தொடுத்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 7 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிறன்று காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியானதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #jammukashmir #pakistansoldiers #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com