கங்கை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
கங்கை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
Published on

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், லுகாரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் முடியிறக்கும் நிகழ்ச்சி மற்றும் வழிபாடு நடத்துவதற்காக நேற்று பிரிஜ்காட் பகுதிக்கு வந்திருந்தனர். பின்னர், அங்குள்ள கங்கை நதியில் குளித்தனர்.

அப்போது 2 பேர் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக மற்றவர்களும் ஆற்றுக்குள் குதித்தனர். அவர்களும் மூழ்கினர். இவர்களில் 3 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மற்ற 7 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com