பிரேசிலில் அதிர்ச்சி - கேட்பாரற்று நின்றிருந்த காரில் பிணமாக கிடந்த 7 பேர்

பிரேசிலில் தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு கேட்பாரற்று நின்றிருந்த காருக்குள் 7 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கேட்பாராற்று நின்ற காருக்குள் இருந்த 7 பேர் பிணம்
கேட்பாராற்று நின்ற காருக்குள் இருந்த 7 பேர் பிணம்
Published on

ரியோ டீ ஜெனிரோ:

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ மாகாணத்தில் உள்ள அங்ரா டோஸ் ரெயிஸ் நகரில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

இதில் தொழிற்போட்டி காரணமாக போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி பயங்கரமாக மோதிக்கொள்வதால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த நகரில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாராற்று நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் அந்த காரை சோதனை செய்தனர்.

அப்போது, காருக்குள் 7 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காருக்குள் பிணமாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டனர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை.

கடந்த சனிக்கிழமை இதே பகுதியில் 2 போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்ததாகவும், கொலை செய்யப்பட்ட 7 பேரும் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் கூறினர்.

எனினும், பிணங்களோடு காரை தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு சென்றவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து விட்டால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும் என கூறும் போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com