தெலுங்கானாவில் ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் பலி

தெலுங்கானாவில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். #Telangana #AutoAccident
தெலுங்கானாவில் ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் பலி
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தில் உள்ள கோடட் நகரை சேர்ந்தவர்கள் ஒரு ஆட்டோவில் தம்மரா கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் நடந்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினர். அவர்களது ஆட்டோ கோடட் பகுதியில் சென்றபோது, ஆட்டோ டிரைவர் முன்னால் சென்ற ஒரு லாரியை வேகமாக முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். காயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com