ஈராக் விமானப்படை தாக்குதலில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஈராக் நாட்டில் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7 கொல்லப்பட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பாக்தாத்:

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் அப்பாவி பொதுமக்களை கொன்றுகுவித்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையடுத்து இரு நாடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசுப் படையினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அரசுப்படையினரின் தாக்குதலலால் உயிர் பயத்தில் பல பயங்கரவாதிகள் சரணடைந்தனர். ஆனால் சில பயங்கரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். 

தப்பியோடிய சில பயங்கரவாதிகள் ஈராக்-சிரியா இடையிலான மலையோர எல்லைப்பகுதிகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். அங்கிருந்தவாறு அரசுப் படையினர் மீது அவ்வப்போது அதிரடியாக ‘கொரில்லா’ தாக்குதல்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹீம்ரின் மலைத்தொடரில் அமைந்துள்ள டியாலா மாகாணம் சட் அல் ஷம்மாரி பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை குறிவைத்து ஈராக் விமானப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com