ஆப்கானிஸ்தானில் 6 இந்தியர்கள் கடத்தல்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பொறியாளர்களை மர்மநபர்கள் இன்று கடத்திச் சென்றனர். #SevenIndianskidnapped
ஆப்கானிஸ்தானில் 6 இந்தியர்கள் கடத்தல்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான முக்கிய மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 150 பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பாக்லான் மாகாணத்தில் பணியாற்றிவரும் சிலர் இன்று ஒரு மினி பஸ்சில் பாக்-இ-ஷாமல் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அந்த வாகனத்தை வழிமறித்தனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த டிரைவர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 6 பொறியாளர்களை அவர்கள் வாகனத்துடன் கடத்திச் சென்றனர்.

இந்தியர்கள் கடத்தப்பட்ட தகவலை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். #SevenIndianskidnapped

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com