கம்போடியா நாட்டில் கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி

கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இன்று இடிந்து தரைமட்டமான விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கம்போடியா நாட்டில் கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி
Published on

தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது.

இந்த கட்டிடத்தின் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று வழக்கம்போல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று ஒட்டுமொத்த கட்டிடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 50 தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com