

புதுடெல்லி:
நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிறுமிகள் பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட்டை 60 நாட்களில் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
போக்சோ சட்டத்தின்கீழ் 100 வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் சிறப்பு கோர்ட்டை அமைக்க வேண்டும். இந்த சிறப்பு கோர்ட்டுகள் 60 நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.