

கர்நாடக மாநிலத்தில் திருமண ஆசை காட்டி பெண்களிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்தவன் சயனைடு மோகன். ஆரம்பத்தில் ஆசிரியர் வேலை பார்த்த மோகன், கொலை முயற்சி வழக்கில் சிக்கியதால் பணியில் இருந்து நீக்கப்பட்டான். பின்னர் பெண்களை தன் காம வலையில் விழ வைத்து, கொலை செய்து பணத்தை சுருட்டுவதையே முழுநேர தொழிலாக செய்ய ஆரம்பித்தான்.
2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 20 பெண்களை இவ்வாறு ஏமாற்றி கொலை செய்துள்ளான். அனைவரையும் சயனைடு கொடுத்து கொன்றதால் சயனைடு மோகன் என்று அழைக்கப்படுகிறான். ஏற்கனவே மூன்று கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சயனைடு மோகன், தற்போது நான்காவது வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளான்.
புத்தூரைச் சேர்ந்த திருமணமாகாத 22 வயது பெண்ணை தன் வலையில் விழ வைத்த மோகன், வேலைக்கான இன்டர்வியூ இருப்பதாக கூறி மடிகேரிக்கு அழைத்துள்ளான். அதுவும் நிறைய நகைகள் அணிந்து வந்தால் இன்டர்வியூ நடத்துபவர்களை ஈர்க்க முடியும் என்றும் கூறியிருக்கிறான். இதனை நம்பி அந்தப் மடிகேரிக்கு சென்றதும் லாட்ஜில் அறை எடுத்து இருவரும் தங்கி உள்ளனர். இரவில் அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துள்ளான் மோகன்.
மறுநாள் விடிந்ததும் வேலைக்கான இன்டர்வியூக்கு அழைத்த மோகன், நகைகள் யெல்லாம் தேவையில்லை, அறையிலேயே இருக்கட்டும் என்று கூறியிருக்கிறான். மறுக்காமல் அனைத்தையும் கழற்றி வைத்துள்ளார் அந்தப் பெண். பின்னர் பஸ் நிலையம் சென்றதும், தன்னிடம் இருந்த சயனைடு மாத்திரையை கொடுத்த மோகன், நேற்று உடலுறவு வைத்ததால் கர்ப்பம் தரிக்காமல் இருக்க இந்த மாத்திரையை சாப்பிடு என்று கூறியுள்ளான். மாத்திரையை வாங்கிக்கொண்டு வாஷ்ரூம் சென்ற அந்தப் பெண், மாத்திரையை சாப்பிட்ட உடனேயே இறந்துவிட்டார்.