குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் களம் இறங்குகிறார் செரீனா வில்லியம்ஸ்

‘குழந்தை பெற்றெடுத்த பிறகு முதல் முறையாக அபுதாபி போட்டியின் மூலம் டென்னிஸ் களம் திரும்ப இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறி உள்ளார்.
குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் களம் இறங்குகிறார் செரீனா வில்லியம்ஸ்
Published on

முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. 36 வயதான செரீனா வில்லியம்ஸ் ஜனவரி 15-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில் அதற்கு முன்னோட்டமாக அவர் அபுதாபியில் 30-ந்தேதி நடக்கும் கண்காட்சி போட்டி ஒன்றில் கலந்து கொள்கிறார். இதில் அவர் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோவை எதிர்கொள்கிறார். 

‘குழந்தை பெற்றெடுத்த பிறகு முதல் முறையாக அபுதாபி போட்டியின் மூலம் டென்னிஸ் களம் திரும்ப இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று செரீனா கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com