

வார்சா:
ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான கைப்பந்து விளையாட்டின் தகுதிச்சுற்றுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில் பெண்கள் பிரிவுக்கான சில ஆட்டங்கள் போலந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் தலைநகர் வார்சாவில் செர்பியா அணியும் போலந்து அணியும் மோதின. இதில் செர்பியா அணி 21-25, 25-23, 25-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
செர்பியா அணி இதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் பியுர்டோ ரீகோ அணிகளை வீழ்த்தியிருந்தது. இதே போன்று ஆண்கள் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்குகிறது.