

ஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் அஸ்கர் ஆப்கன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக குல்பதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு ரஷித் கான், முகமது நபி போன்ற சீனியர் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் கிரிக்கெட் போர்டின் முடிவு என்பதால் ஏற்றுக் கொண்டனர்.
உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 9 ஆட்டத்திலும் தோல்வியடைந்தது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் கடும் நெருக்கடி கொடுத்தது.
இதனால் குல்பதின் நைப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று குல்பதின் நைப் குற்றம் சாட்டியுள்ளார்.