செங்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

செங்குன்றம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஏ.நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 55). இவர் பாடியநல்லூர் அருகே உள்ள லாரி அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

ரவி நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மொட்டை மாடியில் தூங்கினார். இதையறிந்த மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com