

வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதிபாளையம் கிராமத்தில் சுந்தராடிவலசு என்ற ஊரில் குமரவேல் என்பவரது காடு உள்ளது. இதில் கரூர்
மாவட்டம் பரமத்தி-திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள நியூபுகளூர் வரை பவர் கிரேடு உயர் அழுத்த மின் கோபுர கம்பி செல்கிறது, இதற்கு
அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் உயர் மின் அழுத்த பாதைக்கு 2013 நில எடுப்பு சட்டத்தின்படி அரசாணை எண் 54 ன் படி . சந்தை மதிப்பில்
இழப்பீடு வழங்க கோரி சுந்தராடிவலசை சேர்ந்த குமரவேல் என்பவர் தலைமையில் உயர் அழுத்த மின் கோபுரம் அருகே தங்களது
கால்நடைகளுடன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் “எங்களது பகுதியில் அரசு வழிகாட்டி மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ.1½ லட்சம் முதல் ரூ.6 லட்சம் தான் உள்ளது, ஆனால் சந்தை மதிப்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் என உள்ளது. எங்களது நிலத்தின் மீது உயர் அழுத்த மின் கோபுரம் கம்பி செல்வதால் அந்த பகுதியில் விவசாயமும் செய்ய முடியாது கால்நடைகளும் மேய்க்க முடியாது. அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வரும் காலங்களில் பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் எங்களது நிலங்களுக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.