தற்கொலைக்கு மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது

தற்கொலைக்கு மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைக்கு மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது
Published on

மாமல்லபுரம்:

செம்மஞ்சேரியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடன் பிரச்சினையால் மோகன் தவித்து வந்தார்.

கடந்த 8-ந் தேதி வாணி புதுகல்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு மகளுடன் வந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மோகன் கடன் சுமை காரணங்களை கூறி குடும்பத்துடன் தற்கொலை செய்ய மனைவியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு வாணி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மோகன் அரிவாளால் மனைவி வாணியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

மோகனும் வி‌ஷம் குடித்து விட்டு தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்த மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com