செம்மஞ்சேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலி

செம்மஞ்சேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வேளச்சேரி:

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று கந்தன்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் சமையல் வேலை செய்த தொழிலாளர்கள் மூர்த்தி, தேசிகன், சண்முகம், முருகேசன் உள்பட 11 பேரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வேளச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ராஜீவ் காந்தி சாலையில் இருந்து தரமணி 100 அடி சாலைக்கு செல்வதற்காக எஸ் ஆர் பி டூல்ஸ் சிக்னல் அருகே திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சென்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com