செல்வபுரம் குளத்தில் துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை- துப்புதுலக்க 3 தனிப்படை அமைப்பு

கோவை செல்வபுரம் குளத்தில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொன்று வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்வபுரம் குளத்தில் துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை- துப்புதுலக்க 3 தனிப்படை அமைப்பு
Published on

கோவை:

கோவை செல்வபுரம் செல்வாம்பதி குளத்தில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொன்று வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். நிர்வாண நிலையில் மிதந்த பெண்ணின் தலை, கைகள், வயிறு துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் தனித்தனியாக வீசப்பட்டு இருந்தது. கால்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சமீபத்தில் மாயமான இளம்பெண்களின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இளம்பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி வீசியிருப்பதால் இவ்வழக்கில் குறைந்தது 2-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அதற்குள் அரிசியை போட்டு குளத்தில் வீசி உள்ளனர். இதனால் 3 நாட்களுக்கு பிறகே உடல் வெளியே வந்துள்ளது. 

நன்கு திட்டமிட்டு இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், இந்த கொலையில் கூலிப்படை கும்பல் ஈடுபட்டி ருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடித்தால், இவ்வழக்கில் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியும் என்பதால்  அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த கொலையில் துப்பு துலக்குவதற்காக மாநகர துணை கமிஷனர் லட்சுமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com