துறையூரில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

துறையூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்திய 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
துறையூரில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்
Published on

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் புறவழி சாலையில் போலீசார் வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அனுமதியின்றி மணல் கடத்திய 2 டிப்பர் லாரிகளை இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தர். 

விசாரணையில் உப்பிலியாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சேகர் என்பவரின் டிப்பர் லாரி என்பதும் மற்றொன்று கீரம்பூரை சேர்ந்த வேணுகோபால் மகன் அருண்குமார் என்பவரது டிப்பர் லாரி என்பதும் தெரியவந்தது. மேலும் மணல் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவர்களான உப்பிலியாபுரம் சேர்ந்த கோபிநாத் மற்றும் சுந்தரேசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com