திருவெண்ணைநல்லூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

திருவெண்ணைநல்லூர் அருகே மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணைநல்லூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்
Published on

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் தலைமையிலான போலீசார் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கரடிபாக்கம் தென்பெண்ணையாற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்தது. போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். போலீசார் அவரை விரட்டி சென்றனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மணல் லாரியை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com