தமிழகத்தை ஆள்பவர்கள் பதவியை விட்டு விலகினால் மக்கள் மகிழ்ச்சி அடைவர்: சீமான்

தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியை விட்டு விலகினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
தமிழகத்தை ஆள்பவர்கள் பதவியை விட்டு விலகினால் மக்கள் மகிழ்ச்சி அடைவர்: சீமான்
Published on

மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை ஆள்பவர்கள் பதவியை விட்டு அவர்களாகவே போய் விட்டால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்கிறதோ அதை கேட்டுத்தான் இவர்களால் செய்ய முடிகிறது.

ஆகவே இவர்களிடம் எதுகுறித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை. வாக்களித்த விவசாயிகளை, கதிராமங்கலம், நெடுவாசலில் போராடுபவர்களை முதல்வர் நேரில் சந்திக்க என்ன இடையூறு இருக்கிறது என்று தெரியவில்லை. மக்களுக்கும் அரசுக்கும் ஏன் இந்த இடைவெளி உள்ளது?


தினகரன் கைது செய்யப்பட்டபோது அவருக்காக நாங்கள் குரல் கொடுத்தோம். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் குற்றச்சாட்டு குறித்து எதுவுமே பேசவில்லை. அரசு எந்திரம் ஏதோ நாட்களை கடத்திக்கொண்டு செல்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலையிலும் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் ஒரே நிலைப்பாடுதான். பேரறிவாளன் பரோலுக்கு சட்டத்தில் இடம் இருந்த போதும் மத்திய அரசின் நிலைப்பாட்டையே மாநில அரசும் செய்து வருகிறது.

ஆகையால் தமிழக அரசுக்கு என்று தனி நிலைப்பாடு எதுவும் இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com