ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் 5 பாதுகாப்பு படைவீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் 5 பாதுகாப்பு படைவீரர்கள் பலியாகியுள்ளனர். #KashmirEncounter
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் 5 பாதுகாப்பு படைவீரர்கள் பலி
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாபாகுண்ட் எனும் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் அந்த கிராமத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், பாதுகாப்பு படைவீரர்கள் 5 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

முன்னதாக, இன்று அதிகாலை இதேபகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #KashmirEncounter

X

Maalai Malar
www.maalaimalar.com