தொடர் போராட்டம் எதிரொலி - ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகையை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தொடர் போராட்டம் எதிரொலி - ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு
Published on

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.

ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளது என்று குற்றம்சாட்டுகின்றன.

இதற்கிடையே, தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகையை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com